×

விமான ஓடுதளத்தில் உணவு சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ1.20 கோடி அபராதம்


மும்பை: விமான ஓடுதளத்தில் அமர்ந்து பயணிகள் உணவு சாப்பிட்டது தொடர்பாக இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. விதிமீறல் தொடர்பாக இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்கள், மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனம் (எம்ஐஏஎல்) ஆகியவற்றுக்கு விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பும் (பிசிஏஎஸ்) விமான போக்குவரத்து இயக்குநரகமும் (டிஜிசிஏ) மொத்தம் ரூ.2.70 கோடி அபராதம் விதித்துள்ளது. கோவாவில் இருந்து டெல்லி புறப்பட்ட இண்டிகோ விமானம், பனிமூட்டம் காரணமாக கடந்த 15ம் தேதி மும்பைக்கு திருப்பி விடப்பட்டது. விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகள், விமான நிலைய தரைப்பகுதியில் அமர வைக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தரையில் அமர்ந்து உணவு உண்ணவும் செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது. இதுபற்றி தகவல் தெரிவிக்கவில்லை என இண்டிகோ விமான நிறுவனத்துக்கும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது. இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.1.20 கோடி, மும்பை சர்வதேச விமானநிலைய நிறுவனத்துக்கு ரூ.60 லட்சம் என விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அபராதம் விதித்துள்ளது. இதே போன்று மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துக்கு டிஜிசிஏ ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

The post விமான ஓடுதளத்தில் உணவு சாப்பிட்ட பயணிகள்: இண்டிகோ நிறுவனத்துக்கு ரூ1.20 கோடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : Indigo ,Mumbai ,Air India ,Spice Jet Airlines ,Mumbai International Airport Company ,MIAL ,Dinakaran ,
× RELATED விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8...